Powered By Blogger

Apr 18, 2019

*LICயின் மதிப்புமிக்க பாலிசிதார்ர்கள் அவசியம்* *தெரிந்து கொள்ளவேண்டிய,* *தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய* *சில முக்கியமான தகவல்கள்.*

செலுத்த வேண்டிய  பிரீமிய
தவணைத் தொகைகளை
காலம் தவறாமல் சலுகை நாட்களான *30 நாட்களுக்குள்* கட்டாயம்
செலுத்திவிட வேண்டும். அப்போதுதான் பாலிசி பலன்கள் அனைத்தும் தொடர்ந்து கிடைக்கும்.

பிரீமியம் செலுத்த  தவறிய முதல் தவணை தேதியிலிருந்து *இரண்டு ஆண்டு முடிவிற்குள்* பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், ஒருபோதும் புதுப்பிக்க முடியாது என்பதோடு, இதுவரை கட்டிய பிரீமியங்களையும் இழக்க நேரிடும்.

*விபத்துக்காப்புச்சலுகை* பலன் தொடர்ந்து கிடைக்க
தவணைப்பணத்தை சலுகை நாட்களான 30 நாட்களுக்குள்
(“Days of Grace”க்குள்)
கட்டியாகவேண்டிய
கட்டாயத்தையும் தவறாது
தெரிந்து கொண்டு, தவணையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட நாமினிதார்ர் இயற்கை எய்தி இருந்தால், அவருக்குப் பதிலாக புதிய நாமினிதார்ரை விரைவில் நியமிக்க வேண்டும்.

மைனராக இருக்கும்போது பாலிசி எடுத்திருந்து, இப்போது மேஜர் ஆகியிருந்தால், உடனடியாக புது நாமினிதாரை நியமிக்க வேண்டும்.  அத்துடன் விபத்து பாதுகாப்பு சலுகையை பாலிசியில் சேர்ப்பிக்க விண்ணப்பித்து, சற்று கூடுதல் பிரிமியம் செலுத்தி தாமதமில்லாமல் பெறவேண்டும்.

திருமணத்திற்கு முன்பு பாலிசி எடுத்திருந்து, இப்போது திருமணம் ஆகியிருந்தால்,  நாமினேசனை மனைவின் பெயருக்கு உடனடியாக மாற்றம் செய்யவேண்டும். ஆனால், அது பாலிசிதார்ரின் தனிப்பட்ட விருப்பம்.

பாலிசியின் மீது கடன் வாங்கியிருந்தால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவசியம் வட்டி கட்டவேண்டும்.  அப்போது தான் கூட்டுவட்டியை தவிர்க்க முடியும்.

செலுத்த வேண்டிய வருமானவரியில் ஒவ்வொரு ஆண்டும் சலுகை பெற *(80-C செக்சன்படி)* அதிகபட்சமாக  ரூ. 1,50,000/- வரை பிரீமியம் செலத்தலாம்.
*அத்துடன் LICயின் ஜீவன் ஆரோக்யா மற்றும் கேன்சர் கவர் பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தி, 'ஆரோக்கிய பாதுகாப்பு' பெறுவதன் மூலம் சீனியர் சிட்டிசன்கள் ரூ. 30,000/-, மற்றவர்கள் ரூ. 25,000/- வரையிலும் மேலும் அதிகமாக வருமானவரி சலுகை (80-D செக்சன்படி) பெறலாம்.*
அனைத்து தகவல்களும்  தாமதமில்லாமல் உரிய நேரத்தில் உங்களுக்கு வந்து சேர, உங்கள் முகவரி, செல் போன் எண், ஈமெயில் முகவரி மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றில் மாற்றம் இருந்தால், உடனுக்குடன்
LICக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் தங்கள் பாலிசிகள் குறித்த
அனைத்து விபரங்களையும்
தெளிவாக தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொண்டால் பின்னாளில்
எந்த சிக்கலும் வராது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் உயரிய நலன்களைக் கருத்தில் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

*விரைந்து பிரீமியம் செலுத்துங்கள்!*
**தொடர்ந்து பாதுகாப்பு பெறுங்கள்**.

D.SELVAN
Chief Advisor-LIC of India
98430-49474

எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! - தி இந்து -

பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.

1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.

‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.

இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.

‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.

காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!

‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!
நன்றி.
இந்து (தின இதழ் தமிழ்)

Aug 27, 2017

*மனித வாழ்க்கையின் உண்மை*

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

*மனித வாழ்க்கையின் உண்மை*

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!

தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்!

இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும் இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்!

தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது! இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று!

தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது!

டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது!

இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது!

ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது!
இது தவிர சென்னை சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது!

தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன! காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இவை இயங்கி வருகின்றன!
சிவில் போலீஸ் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப் போலீஸாரும் உள்ளனர்!

மாநிலத்தில் ஒரு ரயில்வே சரகம் உள்பட மொத்தம் 12 காவல் சரகங்கள் உள்ளன! ஒவ்வொரு சரகத்திலும் 2 முதல் 3 மாவட்டங்கள் உள்ளன!
சில சரகங்களில் இவை கூடுதலாக இருக்கும். துமிழக காவல்துறையின் பணியை எளிமையாகவும் சிறப்பாக்கும் வகையிலும் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீரிய முறையில் அவை செயல்பட்டு வருகின்றன!

அவை ஆயுதப் போலீஸ் அல்லது தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் ஹோம் கார்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு சிவில் சப்ளைஸ் சிஐடி கடலோர பாதுகாப்புப் படை சிபிசிஐடி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு தமிழ்நாடு கமாண்டோ படை மதுவிலக்கு தடுப்புப்பிரிவு ரயில்வே போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு சிறப்பு காவல் சிஐடி தொழில்நுட்பப் பிரிவு தமிழக காவல்துறையின் வரலாறு தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது!

அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ உங்கள் முன் :

1659 - மதராஸ்பட்டத்தின் பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை, பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளயைர் அரசு நியமித்தது!
இது தான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல்!

1770ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார்!

இதன் மூலம் பொது அமைதி பொது சுகாதாரம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது!

பின்னர் 1771ம் ஆண்டு சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா? மோசடிகள் நடக்கிறதா? என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்டரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்!

1780ல் - காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) பதவி உருவாக்கப்பட்டது!

மார்க்கெட்களை கண்காணித்து பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது!

1782 -  தவறுகளைத் தடுக்கவும் மோசடிகளை தடுக்கவும் சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்கினார்!

1791 – கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது! வுpயாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் லஞ்சம் வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது!
அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது!

1806 – 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்!

1829 – 1832 - மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம் திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், பெயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது!

1834 - முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும் டி.எஸ.பி.யாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்!

1856 - போலீஸ் சட்டம் 12 ஆக திருத்தப்பட்டது! அதன்படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி.போட்லர்சன் நியமிக்கப்பட்டார்!

இதனை தொடர்ந்து
1859 – ல் நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்கு தான் ஆரம்பித்தது என குறிப்பிட்டு சொல்லலாம்!
அதனை தொடர்ந்து போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது!

1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்!

1865 ல் போலீஸ் (டிஜிபி)  தலைமையிடம் அமைந்துள்ள கட்டிடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது!

.1874 - இந்த கட்டத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ.20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது! மேலும் ரூ.10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன!

1884 - மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை  என்று சொல்லப்படும் வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டதைத் தொடர்;ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது!

1895 - ல் கை விரல் ரேகைப்பிரிவு தொடங்கப்பட்டது!

1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது!
வடக்கு சரகம் துணை ஆணையரின் தலைமையிலும் தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன!

1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது! பாவ்செட் என்பவர் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்!

1909 – கிங்க்ஸ் என்ற போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது!
1919 – மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார்! இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான் என்பது பெருமைக்குரியதாகும்!

பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார். 1928 – சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப்பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது!

1929 - மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப்பிரிவு சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது! 1935 பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன!

1946 – போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது!
1947 சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி டெல்லி (ஐடீ) ஐபி யின் இயக்குநராக பொறுப்பேற்றார்! இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்!

1951 - மெட்ராஸ் மோப்ப நாய்ப்படை உருவாக்கப்பட்டது! சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்கள் படை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது!

1956 – போலீஸ் ரேடியோ அலவலகம் உருவாக்கப்பட்டது!
1959 – தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது!
1960 - போலீஸ் ஆய்வு அமையம் உருவாக்கப்பட்டது!
.1961 மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது!

மாநில தடயவியல் அய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது!
.1963 - ல் மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழ அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது !
ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது!

1971 - போலீஸ் கம்ப்யூட்ட்ர் பிரிவு உருவாக்கப்பட்டது! காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடஙகிய முதல் மாநிலம் தமிழகம் தான்!

கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது!

தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்து 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!

1976 – ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது! சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது!

.1979 - தமிழக கால்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது. 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!

1976 – தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்!

1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது!

1984 – சிஐடி வனப்பரிவு உருவாக்கப்பட்டது!

1989 - தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது! காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படடது!

1991 - காவல்துறை சிறைத்துறை தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது!

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது!

1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது! தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது! படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது!

1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!
1994 – கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது!
1997- மதக் கலவரங்களைத் தடுத்த விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!

2001 - புதிய நூற்றாண்டில் தமிழக காவல்துறை 91,331 போலீஸார் 11 சரகங்கள் 30 போலீஸ் மாவட்டங்கள், 2 இரயில்வே மாவட்டங்கள் 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சரக்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. 2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது!

சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஜஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. 2003 நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம் உட்பட 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன!

2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது! இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் என பெயர் பெற்றதாகும்!

2005 - ல் செங்கை கிழக்கு காவல் மாவட்டம். சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது. 2006 – ஆசியாவிலேயே மிகப் பெரியதும். நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது!

2007 – சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.
இப்படி எத்தனையோ காலகட்டங்களைத் தாண்டி நமது தமிழக காவல்துறை இன்று சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகின்றது!

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எள்ளளவு குறையாது பணிகளை மேற்கொண்டு வருகிறது!

Jun 26, 2017

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

🍷🍾🍺🚬💊🛌🏍🚕 *கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.*
From our friend T. Ganesh...

💰💷💶 *கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.*